டெங்கு பாதிப்பு... முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

 
அதிமுக சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான  சி.விஜயபாஸ்கர், டெங்கு பாதிப்பு காரணமாக திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருச்சி, விராலிமலை அருகே உள்ள இலுப்பூரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக  விஜயபாஸ்கருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்து வந்துள்ள நிலையில், தொடர் காய்ச்சல் காரணமாக அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து, விஜயபாஸ்கர், சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

திருச்சி அப்போலோ மருத்துவமனை

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கட்சியினர், அரசு இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web