அதிர்ச்சி... தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 11,000யைக் கடந்தது... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை 4 பேர் என்ற அளவில் தான் உள்ளது. வரும் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. மாதா மாதம் மழை பெய்வதால் எட்டு மாதங்களில் டெங்குவின் பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. வரும் நாட்கள் மழை காலம் என்பதால் டெங்குவின் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட 11 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!