தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு ... 3 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சென்னை: உலக சுகாதார அமைப்பு (WHO) உலகிலேயே மிக அதிக அபாயம் உள்ள உயிரினமாக கொசுவை அறிவித்துள்ளது. குறிப்பாக, டெங்கு மற்றும் மலேரியா போன்ற வெப்பநிலை சார்ந்த நோய்களை பரப்பும் கொசுக்கள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் உயிர்களை பாதித்து வருகிறது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களால் கடந்த சில நாட்களாக காய்ச்சல் நோய்கள் அதிகரித்து, அதனுடன் கூடிய டெங்கு பாதிப்பு பெருமளவில் பெருகி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு, அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக ஏடிஸ் வகை கொசுக்கள் காணப்படுகின்றன. இவை மழை காலங்களில் தேங்கிய நீரில் அதிகமாக வளர்ந்து விரைவில் பரவுகின்றன. மருத்துவர்கள் அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு ஆகியவை டெங்கு நோயின் அடையாளமாக இருப்பதாக கூறுகின்றனர்.மருத்துவர்கள், மூன்று நாளுக்கும் மேலாக அதிக காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். முதியோர், குழந்தைகள் போன்ற உயிரிழப்புக்கு ஆளாகும் பிரிவினர்களுக்கு மேலும் கவனம் தேவை.

கொருக்களுக்கிடையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால், அருகிலுள்ள அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கூறுகிறது. டெங்கு பாதித்தவர்கள் அதிகப்படியான திரவப்பானங்கள், குறிப்பாக நீர் மற்றும் பழச்சாறு பருகுவதன் மூலம் உடலை ஈரப்பதம் காக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
தமிழ்நாட்டில் இவ்வாண்டு 15,796 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகி, இதுவரை 8 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அரசு வழிகாட்டும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் முறையான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே டெங்கு பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
