உஷார் மக்களே... தீயாய் பரவும் டெங்கு... ஒரே நாளில் 5 பேருக்கு உறுதி!!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

திருவாரூரில் டெங்கு பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த சிந்து டெங்குவால் உயிரிழந்தார். இதனையடுத்து இங்கு தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இன்று மட்டும் ஹோமியோபதி மருத்துவ மாணவி உட்பட 5 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன்  20 பேர்  காய்ச்சல் காரணமாக உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 9 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் மழைக்கால நோய்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. வழக்கமாக வரும் சளி, இருமல், காய்ச்சல் இவைகளுடன் டெங்கு, நிஃபா வைரஸ்களும் பரவத் தொடங்கியுள்ளன.  ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.  

சிந்து


 கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்   அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web