100 குழந்தைகளுக்கு அப்பாவாக ஆசை... ஒரே நாளில் 7 பேருடன் திருமணம் !!

 
ஹபீப்

மத்திய உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசித்து வருபவர்  ஹபீப் என்சிகோன்னே . இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில்  தற்போது ஒரே நாளில்  7 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ஹபீப் பெரும் பணக்காரர் என்பதால்,  இஸ்லாமிய முறைப்படி ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்தில் மணமகள்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் ஹபீப் புதிய கார்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.

திருமணம்

 வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவிகளைப் பாராட்டிய ஹபீப்,  தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். திருமணம் செய்து கொண்டவர்களில்   இருவர் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டதாக ஹபீப் தெரிவித்துள்ளார். இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியானது எனக் கூறியுள்ளார்

 

ஹபீப்

ஹபீப் பெரும் பணக்காரர் என்கிறது உள்ளூர் ஊடகம். அவர் தன்னுடைய 7 மனைவிகள்   அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை திருமணத்தன்றே தனது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு   அனைவரையும் அழைத்துச் சென்றார்.மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருமண விழாவில் மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார், ஹபீப். அதுமட்டுமின்றி மனைவிகளின் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கினார்.  
ஹபீப் அனைத்து மனைவிகளையும் தனித்தனியாக அவர்களது வீட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். விழாவில் கலந்து கொள்ள ஹபீப்பின் மனைவிகள் வாகன அணிவகுப்பில் வீட்டிற்கு வந்தனர். இதில் 40 லிமோக்கள் மற்றும் 30 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். இந்த விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும் இதனால் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.  


இது இந்தியர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வினோதமாக இருந்தாலும் உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமே.  ஹபீப்பின் தந்தை இது வழக்கமான ஒன்று தான் என்கிறார்.  ஒரே நேரத்தில் 7 பெண்களை திருமணம் செய்த பிறகும், ஹபீப் இன்னும் அதிகமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது. 100 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டும் என்பது ஆசை எனவும் கூறப்படுகிறது. 
வரவேற்பு நிகழ்ச்சியில் ஹபீப் தனது மனைவிகளை மிகவும் பாராட்டினார். தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை எனவும்,   அதனால்தான் ஹபீப் ஏழு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிந்தது எனவும் கூறினார்.  இதுகுறித்து ஹபீப் கூறுகையில், “நான் அனைவரையும் தனித்தனியாக மணந்துகொண்டேன். ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க,  அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டேன்” என்றார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web