நாளை முதல் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி!

 
இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!


விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் . இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.  அந்த வகையில் நாளை புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடும், அக்.,2ல் மகாளய அமாவாசை வழிபாடும் நடக்கிறது; 
இதற்காக நாளை செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள்  தினமும் காலை 6:00 முதல் பிற்பகல்  12:00 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என  கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சதுரகிரி

 பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாட்களில் நடைபெறும்  சிறப்பு வழிபாடுகளில்  கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதுரகிரி

மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் திடீரென கனமழை பெய்தால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும். அதே போன்று பக்தர்கள் இரவில் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட, எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான பொருட்களை மலை மீது கொண்டு செல்லக்கூடாது என்பது உட்பட  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web