பழனியில் குவிந்த பக்தர்கள்... இன்றிரவு மாரியம்மன் திருக்கோயில் மாசி தேரோட்டம்!

 
மாரியம்மன்

இன்றிரவு மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி நகர மக்களின் பிரதானமாக கோயிலாக வழிபடப்படுவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான இக்கோயிலில் மாசித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பழனி
கடந்த பிப்ரவரி 13ம் தேதி அரிவாள் எடுத்துக் கொடுத்தலும், கம்பம் சாட்டுதலும் நடைபெற்ற நிலையில், கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தலும் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற்றது.

பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

கொடியேற்றம் துவங்கிய முதல் 10 நாட்களும் அருள்மிகு மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். நேற்று பிப்ரவரி 27ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைப்பெற்ற நிலையில், இன்று பிப்ரவரி 28ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. மாசி தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனியில் குவிந்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை ஊரின் முக்கிய பிரமுகர்களும் கோவில் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web