தனுஷ் பட நடிகை கர்ப்பம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
ஸ்வாரா பாஸ்கர்

 தனுஷ் நடிப்பில்  ஹிந்தியில் முதலில்  வெளியான படம் ராஞ்சனா.  இந்த திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற தலைப்பில் வெளியானது. இந்த படத்தில் தனுசுக்கு கதாநாயகியாக சோனம்கபூர் நடித்தார். 2வது கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்திருந்தார்.  இவர் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.  

ஸ்வாரா பாஸ்கர்

அதே போல் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கும் அதிரடி பதில் அளிப்பவர் . சினிமாவில் மட்டுமல்ல அரசியல் சார்ந்த விஷயங்களுக்கும் அதிரடி பதில் அளித்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வாடிக்கையான ஒன்று தான். இவர்  கடந்த சில மாதங்களுக்கு முன் இவரின் நீண்ட நாள் காதலரான பகத் அகமத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை எளிமையாக செய்து கொண்டாலும் பிரம்மாண்ட வரவேற்பு விழா மும்பையில் நடைபெற்றது.

கர்ப்பம்

இந்த வரவேற்பு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். தற்போது ஸ்வாரா பாஸ்கர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை ஸ்வாரா தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய ரசிகர்கள், பிரபலங்கள், சக திரை நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web