அக்கா மகனை சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்!

 
தனுஷ்

தனது சொந்த அக்கா மகனை, நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கஸ்தூரிராஜா, செல்வராகவன், தனுஷ் என குடும்பத்தில் 3 பேர் இயக்குநர்களாக இருக்கின்றனர். நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினி, செளந்தர்யா ரஜினி என இருவரும் படங்களை இயக்கியுள்ளனர். இந்நிலையில், தனுஷின் அக்கா மகனும் திரையுலகில் அறிமுகமாகிறார்.

குடும்பத்துடன் நடிகர் தனுஷ்

தனது ஐம்பதாவது படத்தை இயக்கி, நடிப்பதில் பிஸியாக இருக்கிறார் தனுஷ். இந்த படத்திற்கு பின், இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த வேலைகள் ஒருபக்கம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் தனுஷின் 51வது படம் குறித்தானத் தகவலும் வெளியாகியுள்ளது.

தனுஷ்

தனது 51வது படத்தையும் தனுஷே இயக்கி நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில், தனது அக்கா மகனை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்த இருக்கிறார். தனுஷீன் அக்கா மகன் அறிமுகமாவதை, ஜிவி பிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கலாம். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web