”DNS” தனுஷின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்... ரசிகர்கள் உற்சாகம்.... !

 
டிஎன்எஸ்

நடிகர் தனுஷ் நடிப்பில்   பொங்கலுக்குவெளியான  ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும்  வரவேற்பு கிடைத்துள்ளது . இந்நிலையில், நடிகர்  தனுஷ் நடிகர் நாகர்ஜுனுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனையடுத்து  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தை  இயக்க இருக்கிறார். அதே நேரத்தில்  தனுஷ், தனது 51 வது படமாக சேகர் கம்முலா இயக்கத்தில் கமிட்டாகி இருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில், நடிகர் நாகார்ஜுனாவும் நடிக்கிறார்.

டிஎன்எஸ்
இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ’DNS’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி  (தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா என்பதன் சுருக்கம்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. படத்தின் பூஜை விழாவில் சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தனுஷ்
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா  இருவருமே ’கேப்டன் மில்லர்’ மற்றும் ’நா சாமி ரங்கா’ என அவர்களின் பொங்கல் ரிலீஸ் வெற்றிக்குப் பிறகு இணைகின்றனர். இதனால்  இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இதற்கு முன்  தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்திருந்த ‘வாத்தி’ படம் தோல்வியடைந்த நிலையில், ’ஃபிடா’, ’லவ் ஸ்டோரி’  தெலுங்குப் படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் தற்போது இணைந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web