பாடலாசிரியராக களமிறங்கிய தனுஷ் மகன்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனிப்பாணியை உருவாக்கி தனிமுத்திரை பதித்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் , பாடலாசிரியர் என பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது அவர் இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘ஒரு இயக்குநராக எனக்கு எவ்ளோ மார்க் கொடுப்பிங்க’ என்ற தனுஷின் கேள்விக்கு 98 மதிப்பெண்கள் செல்வராகவன் பதிலளித்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் திரைப்படம் 150 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#NilavukkuEnmelEnnadiKobam first single “Golden Sparrow” lyrics written by #Dhanush's son Yatra 😯👌#NEEK pic.twitter.com/yDIQ6cqiWj
— Prakash Mahadevan (@PrakashMahadev) August 27, 2024
இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3வதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தான் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பல இளம் நடிகர்கள் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட “நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்” படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “கோல்டன் ஸ்பேர்ரோ” என்ற பெயரில் வெளியாகவிருக்கும் இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளார்.
இந்நிலையில் பிரியங்கா மோகன் நடனத்தில் உருவாகியிருக்கும் அந்தப்பாடலை பார்த்திருக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பாடலையும், பிரியங்கா மோகனின் நடனத்தையும் பாராட்டி பேசினார். தனது ட்விட்டரில் எஸ்.ஜே.சூர்யா, “தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் ஆடிய அழகான பாடலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. எளிமையான அழகான ஸ்டைலிஷ் ஸ்டெப்களுடன் நடன அசைவுகளை அமைத்துள்ளனர். இளம் மாமியாக பிரியங்கா மோகன் க்யூட்டாக ஆடியுள்ளார்.பாடலை எழுதியிருக்கும் தனுஷ் சார் பையன் யாத்ரா ஆச்சரியப்பட வைத்துவிட்டார்” என்ற பாடலையும், பிரியங்கா மோகனின் நடனத்தையும் பாராட்டி பேசியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!