வீடியோ... எனக்கு வேணும்.. ரசிகரிடம் கெஞ்சி வாங்கும் ‘தல’ தோனி!!

கிரிக்கெட் ரசிகர்களால் தல யாக கொண்டாடப்பட்டு வருபவர் தோனி. இவர் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டென்னிஸ் போட்டிகளை பார்த்து ரசித்தார். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தோனியை தன்னுடன் கோல்ப் விளையாட அழைப்பு விடுத்தார்.
Latest video of #MSDhoni from US #Viralvideo pic.twitter.com/VqPS4fMWsd
— Akshara (@Akshara117) September 11, 2023
இதனை தொடர்ந்து இருவரும் கோல்ப் விளையாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலானது. அமெரிக்காவில் தோனி, ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். அப்போது பெண் ரசிகை ஒருவர் தோனிக்கு சாக்லேட்டும், பூங்கொத்தும் அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த ரசிகையுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆண் ரசிகர் ஒருவர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள கேட்டார். அவருக்கும் போஸ் கொடுத்து ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார்.
அப்போது ஆட்டோகிராஃப் போடும் போது இடைஞ்சலாக இருந்ததால் முன்னதாக தோனி தன் கையில் வைத்திருந்த சாக்லேட்டை இடைஞ்சலாக இருப்பதால் ரசிகரிடம் கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் போட்டார். ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தற்கு பின்னர் "என்னுடைய சாக்லெட்டை திருப்பி கொடுங்கள்" என்று கியூட்டாக ரசிகரிடம் கேட்டு வாங்கி கொண்டார். இதனை கேட்டவுடன் அங்கிருந்த ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!