மாஸ் வீடியோ... டென்னிஸ் போட்டியில் தோனி?!

 
தோனி

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  கேப்டன் மகேந்திரசிங் தோனி. கிரிக்கெட் ரசிகர்களால் இவர் ’தல’  ஆக கொண்டாடப்பட்டு வரும் தோனி முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் கூட. இவர் கிரிக்கெட் வீரர் என்ற போதிலும்  கால்பந்து மற்றும் டென்னிஸ் போட்டியின் காதலர்.  தற்போது அமெரிக்காவில் விடுமுறையில் இருந்து வரும் தோனி  யுஎஸ் ஓபன் 2023 போட்டியை நேரில் காண சென்றார் .  

கார்லோஸ் அல்கராஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்  இடையேயான ஆட்டத்தை   பார்த்து ரசித்தார். தோனி கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  அதில் எம்எஸ் தோனி கார்லோஸ் அல்கராஸ் பின்னால் பார்வையாளர்கள் மத்தியில் காணப்பட்டார்.

தோனி

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.அமெரிக்க ஓபன் கால் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தினார். அவர் 6-3, 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட்களில் போட்டியை வென்றார். இந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆர்தர் ஆஷே மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web