ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்ட தோனி... வைரல் வீடியோ... !

 
தோனி


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  எம்.எஸ்.தோனி. இவர் தனது ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்டு அவரின் கனவை நிறைவேற்றினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.  அந்த வீடியோவில்   எம்எஸ் தோனி  ரசிகரின் ஷூவில் கையெழுத்திட்டு தனது ஆட்டோகிராஃப் மூலம்  நேசத்துக்குரிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும்  "தனது நாளை உருவாக்கியதற்காக"  எனது கனவு நாயகன்  தோனிக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.  


 
"நன்றி, எம்.எஸ். சிங் தோனி, எனது நாளை மாற்றியமைத்து, எனது நைக் ஏர் ஜோர்டான் பவுடர் ப்ளூவில் எனக்கு ஆட்டோகிராப் கொடுத்ததற்கு" என பதிவிட்டுள்ளார்.  இந்த வீடியோ 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  இந்த ரசிகர் மிகவும் அதிர்ஷ்டசாலி என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.  மேலும் சிலர் அவரது 'விலைமதிப்பற்ற' ஷூவையும் பார்த்து சற்று பொறாமைப்படுகிறார்கள்.

தோனி

மேலும் ஒருவர்   சித்தார்த்திடம் காலணிகளை  எப்போதும் அணிய வேண்டாம் எனவும் பரிந்துரை செய்துள்ளார். மற்றொரு ரசிகர்  "எனக்கும் லெஜண்ட் எம்எஸ் தோனியின் ஆட்டோகிராப் வேண்டும்" என கூறியுள்ளார்.  சித்தார்த் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி  தோனியின் வீடியோக்களை   பகிர்ந்து கொள்வார். கடந்த ஆண்டு, எம்எஸ் தோனி தனது பிஎம்டபிள்யூ 740ஐ சீரிஸில் ரசிகருக்கு ஆட்டோகிராப்பில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web