20 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு சென்ற தோனி... வைரல் வீடியோ!!

கிரிக்கெட் ரசிகர்களால் ‘தல’ யாக கொண்டாடப்படுபவர் தோனி. கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். தோனியுடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்திருந்தார். இருவரும் கிராமத்திற்குச் சென்று பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
MS Dhoni at his village and he spending times with peoples.
— CricketMAN2 (@ImTanujSingh) November 16, 2023
- This is so beautiful..!!! pic.twitter.com/RBBVLgnIbt
நவம்பர் 15ம் தேதி புதன்கிழமை தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் காலை 10.45 மணிக்கு அவரது கிராமமான ல்வாலியை அடைந்தனர். அங்கு அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்தார் என கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வெற்றி பெறவும், சிறப்பாக விளையாடவும் நிறைய டிப்ஸ்களை அள்ளி வழங்கினார். அவரது சொந்த கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தார். பிற்பகல் 1.15 மணிக்கு அவர் கிராமத்திலிருந்து கிளம்பினார்.
அவரது சொந்த கிராமமான ல்வாலி இன்னும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறது. காரில் வந்த தோனி சில தூரம் பிறகு நடைபாதை வழியாக கிராமத்தை அடைந்தார். தோனியின் தந்தை பான் சிங் தோனி சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறி ராஞ்சியில் குடியேறினார். மகேந்திர சிங் தோனியின் உறவினர்கள் இன்னும் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!