”தூம் ” பட இயக்குநர் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்...!!

 
சஞ்சய் காத்வி

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்  சஞ்சய் காத்வி. இவர்  பாலிவுட்டில் 'தேரே லியே'  படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமானார்.  இவர் 2004ல் அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம்  வைத்து 'தூம்'   படத்தை இயக்கினார்.    இதனையடுத்து 2006ம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷனை வைத்து இயக்கிய ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தார்.
சஞ்சய் காத்வி

மேலும், அஜாப் கசாப் லவ், ஆபரேஷன் பரிண்டெய் உட்பட  பல படங்களையும் இயக்கியவர்.    இவர் இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 56 .  சஞ்சய் காத்விக்கு ஜினா என்ற மனைவியும் 2  மகள்களும் உள்ளனர். அவருடைய மறைவு குறித்து அவரின் மகள்   சஞ்சினா.  

சஞ்சய் காத்வி

அவர் மிகவும் ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவரது உடலில் எந்த பிரச்சினைகளும் இதற்கு முன்பு இல்லை என  தெரிவித்துள்ளார்.சஞ்சய் காத்விக்கு இன்னும் 3  நாட்களில் அதாவது நவம்பர் 22ம் தேதி  பிறந்தநாள்  கொண்டாடப்பட உள்ள நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார். இத்தகவல்  பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு என நடிகர்கள், சக நண்பர்கள், இயக்குநர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web