திருச்செந்தூரில் விஐபி தரிசனத்தால் பொதுமக்கள் பாதிப்பு? உயர்நீதிமன்றம் விசாரணை!

 
திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திராமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடுகள் உள்ளன என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. கோயிலில் விஐபி பக்தர்கள் தனி முன்னுரிமையுடன் தரிசனம் பெறுவதால், சாதாரண பக்தர்கள் மணி நேரங்களாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

திருச்செந்தூர் முருகன்

இந்த நிலையைப் பற்றி வழக்கு மதுரை கிளையில் பதிவு செய்யப்பட்டது. இன்று விசாரணையில் நீதிபதி கேள்வி எழுப்பியதில், "திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திராமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடுகள் உள்ளன? விஐபி/விவிஐபி தரிசனங்கள் பொதுப் பக்தர்களை பாதிக்குமா? விஐபி தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா? மாற்று ஏற்பாடுகள் மூலம் பொதுப் பக்தர்கள் காத்திராமல் தரிசனம் செய்ய முடியுமா?" எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

திருச்செந்தூர்

இதன்படி, கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் எவ்வாறு விஐபி மற்றும் பொதுப் பக்தர்களுக்கான தரிசனம் ஒழுங்குபடுத்த உள்ளது என்பதற்கான விளக்கத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!