இந்தியாவிலேயே முதன் முறையாக டிஜிட்டல் ரேஷன் கடைகள்... .!

 
ரேஷன்

இந்தியா முழுவதும் டிஜிட்டல் இந்தியா செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நடைபாதை வியாபாரிகள் பெட்டிக்கடைகள் தொடங்கி மல்ட்டிபிளக்ஸ் மால்கள் வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான். இதன் அடுத்த கட்டமாக இமாச்சல பிரதேசத்தில் டிஜிட்டல் முறையில் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.    மத்திய அரசின் உணவு, பொது விநியோகத் துறையின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஹமீர்பூர் மாவட்டங்களில் திறந்தவெளிக் கட்டமைப்பு மின்னணு வர்த்தக ரேஷன் கடைகளை  தொடங்கிவைத்தார்.

ரேஷன்

 அதன்படி உனா மாவட்டத்தில் 5  ரேஷன் கடைகள், ஹமீர்பூர் மாவட்டத்தில் 6 ரேஷன்  கடைகள் என மொத்தம்  11 ரேஷன்  கடைகள் முதல்கட்டமாக காணொலி மூலம்  தொடங்கப்பட்டது.
 சஞ்சீவ் சோப்ரா இத்திட்டம் குறித்து ரேஷன் கடைகளை  மாற்றியமைப்பதில் அடுத்தடுத்த நகர்வுகளில் நாம் முன்னேறி வலுப்பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.   பயனாளிகளின் மனநிறைவை அதிகரிப்பதுடன், வேளாண் வணிகர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான கூடுதல் வழிகளை வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறியுள்ளார்.  

ரேஷன்

இந்த முயற்சியின் மூலம் ரேஷன் கடைகளில்  முகவர்களுக்கு மின்னணு சந்தையில் தெரிவுநிலை, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனாளிகளுக்கு வெளிப்படையான அணுகல்,  பெரிய சில்லரை விற்பனையாளர்கள், மின் வணிகத் தளங்களுடன் சமமாகப் போட்டியிடும் திறன் என   பல நன்மைகளை வழங்குகிறது எனக் கூறியுள்ளார்.  அத்துடன், ஆன்லைன் மூலம்  கொள்முதல் செய்ய இயலாதவர்கள்  தங்கள் சார்பாக இணையதளத்தில் கொள்முதல் செய்ய ரேஷன் கடை  முகவர்களை அணுகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web