5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

 
விமானம்

புது தில்லி மற்றும் சீனாவின் ஷாங்காய் நகரங்களை இணைக்கும் நேரடி பயணிகள் விமான சேவையை சீனாவின் சைனா ஈஸ்டர்ன் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) தொடங்குகிறது. இதன் மூலம் 2020ஆம் ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையிலான விமான சேவை மீண்டும் உயிர்ப்புடன் தொடங்குகிறது.

விமானம்

2020க்குப் பிறகு, லடாக் எல்லை பிரச்சனையின் காரணமாக இரு நாடுகளும் விமான சேவையை மீண்டும் தொடங்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நிலைமை சீராகியதையடுத்து, இரு அரசுகளும் இணைந்து விமான சேவையை மீண்டும் துவக்க முடிவு செய்தன. இதன்படி, கடந்த அக்டோபர் 26 அன்று, கொல்கத்தாவிலிருந்து குவாங்சூ நகருக்கு இண்டிகோ நிறுவனம் விமானத்தை இயக்கியது.

விமானம்

இப்போது, புது தில்லியிலிருந்து ஷாங்காய்க்கு புறப்படும் சைனா ஈஸ்டர்ன் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை ஷாங்காய் சென்றடையும். அதே விமானம் திங்கள்கிழமை பிற்பகல் ஷாங்காயிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு தில்லி திரும்பவுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் சேவையாக இது இயங்கவுள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுக்குமான சுற்றுலா மற்றும் வணிகப் போக்குவரத்து புதிய உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!