நாளை முதல் அயோத்திக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை... !

 
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்   ஜனவரி 22 ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தபப்ட்டது.  பிரதமர் மோடி  தலைமையில் இந்தியா முழுவதும் இருந்து ஆன்மிகவாதிகள், மதத்தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்தலைவர்கள் என 8000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்பட்ட இந்த விழாவில்   ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு துறை சார்ந்த  பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டனர்.  அடுத்த நாளான ஜனவரி 23 முதல் பக்தர்கள் , பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அங்கு 8000 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு மாத காலத்திற்கு அமைச்சர்கள் ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தி

பொதுமக்கள் தரிசனத்துக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடர்ப்பாடும் இருக்கக்கூடாது என மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பயணிகள் மற்றும் பக்தர்கள் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல்  அயோத்தி விமான நிலையத்தை அடைய நாளை  பிப்ரவரி 1ம் தேதி முதல் 8 புதிய விமான வழி தடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து  சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்” பிப்ரவரி 1ம் தேதி முதல் அயோத்திக்கு 8 புதிய விமான வழித்தடங்கள் தொடங்கப்படும்” என  அறிவித்துள்ளது. 
புது டெல்லியில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் விமானம், காலை 12க்கு அயோத்தியை வந்தடையும்.  அதேபோல அயோத்தியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் விமானம், புதுடெல்லிக்கு காலை 10 மணிக்கு   வந்து சேரும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இயக்கப்படும்.
அதேபோல சென்னையில் இருந்து பிற்பகல்  12:40 மணிக்கு புறப்படும் விமானம்  பிற்பகல்  3.15 மணிக்கு  அயோத்தி சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமான சேவை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம்,  காலை 8 மணிக்கு  அயோத்தியை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல்  12:30 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 2:25 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த விமானம்  இயக்கப்படும்.

ஏர் இந்தியா விமானம்


பெங்களூரில் இருந்து காலை 10 50 மணிக்கு புறப்படும் விமானம்  பிற்பகல்1.30 மணிக்கு  அயோத்தி சென்றடையும் . மறுமார்க்கமாக  அயோத்தியில் பிற்பகல்   2.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு மாலை 4.45 மணிக்கு வந்து சேரும். இது மாதத்தின் 1,3,5 மற்றும் 7ம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல்  மும்பையில் இருந்து காலை 8:20க்கு புறப்படும் விமானம், அயோத்திக்கு காலை 10. 40க்கு சென்று சேரும். காலை 11:15க்கு புறப்படும் விமானம் மும்பைக்கு  பிற்பகல்  1:20 நிமிடங்களுக்கு சென்றடையும். வாரத்தின் அனைத்து நாட்களும்  இந்த விமானம் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web