விஜய்யின் கடைசி படமான “ தளபதி 69” பட இயக்குனர் இவர் தான்...!
இளைய தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கமிட் ஆகி இருக்கும் படங்கள் தவிர புதுபடங்களை நடிப்பதில்லை என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி தற்போது ”கோட்” படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா நடிகராக அறியப்படும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான லியோ, வாரிசு என 2 திரைப்படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்தன.
இதனால் விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் பிசினசும் உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது உருவாகி வரும் “கோட்” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அதில் ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால் அதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஷெட்யூல் முடிவடைவதற்கு முன்னரே தன்னுடைய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தளபதி விஜய். தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், அந்த இடைவெளியில் மற்றுமொரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய். அதுதான் விஜய்யின் கடைசி படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடஇருப்பதாக அவரே அறிவித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் டிவிவி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. அந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத், அட்லீ ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி வெற்றிமாறன் தான் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
வெற்றிமாறன் ஏற்கனவே நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருந்த நிலையில் தளபதி 69 படத்தை இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றிதான் என தளபதி ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க