பிரபல இயக்குநர் சூரிய கிரண் சென்னையில் திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

 
சூரிய கிரண்

நடிகை வரலட்சுமி வழக்கறிஞராக நடித்து வரும் ‘அரசி’ படத்தின் இயக்குநர் சூரிய கிரண் இன்று சென்னையில் திடீரென காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வந்தாலும், தெலுங்கு நடிகை காவேரியுடன் பிரச்சனை, விவாகரத்து என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியிருந்த இயக்குநர் சூரிய கிரண் தமிழில் அரசி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருந்தார்.

சூரிய கிரண்

அரசி படத்தை நடிகை வரலட்சுமி இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசி படத்தில் கார்த்திக் ராஜு, சித்தார்த் ராய், சந்தான பாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்.செல்வா, இசையமைப்பாளராக விபின் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சூரிய கிரண், அரசி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்த நிலையில், தனது முதல் தமிழ் படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென காலமானார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

From around the web