செம ... நெகிழ்ச்சி வீடியோ... குளத்தில் இருந்து பிளாஸ்டிக் பாட்டிலை அப்புறப்படுத்தும் புலி!

 
புலி

சமூக வலைதளங்களில் விலங்குகளின் சேட்டை குறித்த பலவகையான வீடியோக்கள் பதிவிடப்பட்டு தினசரி பெரும் வைரலாகி வருகின்றன. அதே போல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பீர் என அரசும்,   சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  குறைந்தபட்சம்  வனவிலங்கு வாழ்விடங்கள், உயிரியல் பூங்கா என பொது இடங்கள், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை தூக்கி எறிய வேண்டாம் என எத்தனை போர்டுகள் பிளக்ஸ்கள் வைத்தாலும்  விழிப்புணர்வு வருவதே இல்லை எனலாம்.   நம் அலட்சியப்போக்கை கண்டு, சில விலங்குகளும் பறவைகளும் தங்களின் செய்கைகளால் நமக்கு நொடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகின்றன  

 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகில் உள்ள Ramdegi  கிராமத்தில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் நடந்துள்ளது.  அந்தக் காட்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர்  வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ  தற்போது   வைரலாகி வருகிறது.அந்த வீடியோவின்படி, மும்பை Ramdegi என்ற மலை கிராமத்தில் அமைந்துள்ள  பூங்காவில் புலி ஒன்று தண்ணீர் அருந்த வருகிறது. அந்த குளத்தில் பார்வையாளர்கள் வீசி சென்ற ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட புலி தண்ணீர் அருந்துவதை விட்டுவிட்டு  குளத்திலிருந்து தண்ணீர் பாட்டிலை அப்புறப்படுத்தி வெளியில் வீசி எறிகிறது. இதை தீப்கதிகர் என்பவர் தனது  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் வனவிலங்குகளை படம் பிடிக்கும் வைல்ட் லைப் போட்டோகிராபர்.  இந்த வீடியோ டிசம்பர் 23ல்    எடுக்கப்பட்டதாக  பதிவிட்டுள்ளார். 

 

புலி
சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் சுமார் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துண்டுகள் இருப்பதாகவும் அவை தண்ணீரில் கலந்து நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருந்தது.  இத்தனை தீங்கு விளைவிக்கும்   பிளாஸ்டிக் பாட்டில்களை, மனிதர்கள் கொஞ்சமும் பொறுப்பின்றி இப்படி வீசிச்செல்வது  மனிதர்களுக்கு மட்டுமல்ல பூமியில் வாழும் அனைத்து  உயிரினங்களுக்கும் சேர்த்து ஆபத்தையே கொடுக்கும். அதை நாம் உணர்கிறோமோ இல்லையோ, விலங்குகள் உணர்ந்து விட்டன.  ‘என்னை பார்த்தாச்சும் திருந்துங்களேன்’ என்பதுபோல இந்தப் புலியின் செய்கை இருப்பதாக  நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web