அதிர்ச்சி... மாமியார் மேக்கப் கிட்டை பயன்படுத்தியதால் விவாகரத்து.... !

 
மேக்கப் அப் கிட்

பொறுத்துப் போதல் ,விட்டுக்கொடுத்தல் இவைகளெல்லாம் தற்போதைய வாழ்க்கை அகராதியிலேயே இல்லை. என்னுடைய வாழ்க்கை என்னுடைய உரிமை என்ற மேற்கத்திய கலாச்சாரம் பெருகி வருகிறது. அதே நேரத்தில் இதன் காரணமாக விவாகரத்துக்களும் பெருகி வருகின்றன.  திருமணத்தை பொறுத்தவரை பந்தத்தில் இணையும் முன் பெரும்கனவு கணவன் மனைவி இருவருக்குமே இருக்கும்.  சண்டை, சச்சரவு இல்லாத உறவு இல்லை என்பதை புரிந்துகொள்ளவே வருடக்கணக்கில் ஆகி விடுகிறது. முந்தைய தலைமுறை வரை கூட்டுக்குடும்பமாக இருந்து சின்ன சின்ன சண்டைகள், ஊடல்கள், பிணக்குகளை தீர்க்க பெரியவர்கள் உடன் இருந்தனர்.  தற்போது பெரியவர்கள் உடன் இல்லாததால் சின்ன சின்ன சண்டகளுக்கு கூட கோர்ட் வாசப்படி ஏறிவிடுகின்றனர்.  சில சமயங்களில் விவாகரத்து கேட்க சொல்லப்படும் காரணங்கள் எல்லாம் மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை.   

மேக்கப் கிட்
உத்தரப்பிரதேசம்  ஆக்ரா  குறிப்பிட்ட  பெண்ணும், அவரது சகோதரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சகோதரர்கள் இருவரை திருமணம் செய்து கொண்டனர்.   இவர்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக  சென்று கொண்டிருந்த நிலையில்  மாமியார் - மருமகள் பிரச்சினை வெடித்துள்ளது.  மருமகள் அனுமதியின்றி அவரது மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தி கொண்டார். இதற்கு மருமகளுக்கு வந்ததே கோபம்.  இது குறித்து மாமியாரிடம் சண்டை போட்டுள்ளார்.   நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டும் என மேக்கப் பொருட்களை தேடினால் மாமியார் எல்லாவற்றையும் காலியாக வைத்திருப்பார் .

லிப்ஸ்டிக்

 இது குறித்த  மாமியார்- மருமகள் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை.  . நடந்த விசயங்களை தன்னுடைய மகனிடம் மாமியார் தெரிவித்து இருக்கிறார்.  ஆத்திரமடைந்த கணவனும், மாமியாரும்  மனைவியை அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.  இது குறித்து சகோதரி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.   2 மாதங்களாக சகோதரிகள் இருவரும் தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில்   குடும்ப ஆலோசனை மையத்தில் மருமகள், மாமியாருக்கு  ஆலோசனையும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மேக்கப் சாதனங்களை கொடுத்த மருமகள் விவாகரத்து வேண்டுமென பிடிவாதமாக கூறுகிறார்.  இனி அடுத்தகட்டமாக  பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க