மகிழ்ச்சி... அரசு ஊழியர்களுக்கு 4% தீபாவளி போனஸ்?

 
அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட அகவிலைப்படி  உயர்வு குறித்த அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   இனி நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம்  தான். இதனை முன்னிட்டு மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த முறை  3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என  ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 4 சதவீதமாக இருக்கக்கூடும் என்கின்றன அதிகாரப்பூர்வ வட்டாரங்கள்.  

அரசு ஊழியர்கள்


சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்பட்டு  அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது.  ஆண்டின் தொடக்கத்தில் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதைப் போலவே, இந்த முறையும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அரசு ஊழியர்களை பொறுத்தவரை   அகவிலைப்படியும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.  ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு 2  முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.

அரசு ஊழியர்கள்

இந்நிலையில் இம்முறை 4% உயர்வு இருக்கும் என்பதால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46%ஆக உயரக்கூடும்.  இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால்  தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அதன்படி இந்த முறை தமிழக அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக 4% சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என   தமிழக அரசு ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web