ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸ்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி அக்டோபர் 2ம் தேதி தசராவும், அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த போனஸ் ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரயில்வே கார்டுகள், ரயில் நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும். ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
