தீபாவளி கொண்டாட்டம்... இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்!
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.
புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு செய்த மக்கள், பின்னர் குடும்பத்துடன் விருந்து தயாரிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காலையில் இருந்தே மீன், ஆடு, கோழி இறைச்சி வாங்க இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

ஆட்டு இறைச்சிக்கு அதிகமான தேவை காணப்பட்ட நிலையில், ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்பட்டதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனுடன் கோழி மற்றும் மீன் இறைச்சிகளும் விற்பனையில் வேகமடைந்தது.

தீபாவளி தினம் என்பதால் குடும்ப விருந்துக்கான தயாரிப்புகளில் ஈடுபட்ட பொதுமக்கள் இறைச்சி கடைகளில் வரிசையாக காத்திருந்து வாங்கும் காட்சி பல இடங்களில் காணப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
