தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு... உச்சநீதிமன்றம் அதிரடி!

 
தீபாவளி

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடை பட்டாசு தான். இதில் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிப்பதில்  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில் தீபாவளிக்கு கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது  .


 

பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்  பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதன் மீதான விசாரணையின் முடிவில்  பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் .  

பட்டாசு

அவற்றை மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  , பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.   தீபாவளி தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.  இந்த  உத்தரவு கடந்த  சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கெனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web