தீபாவளி கிப்ட்... தமிழக அரசு அலுவலகங்களில் 2 நாட்களில் ரூ.37.74 லட்சம் பறிமுதல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் 37 அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக ரூ.37,74,860 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் மற்றும் லஞ்சம் பெறுவதாக வரும் புகார்கள் அடிப்படையில், ஊழல் தடுப்பு துறை (அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின்பேரில்) மாநிலம் முழுவதும் சோதனைகளை மேற்கொண்டது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனைகளில் 37 அலுவலகங்களில் கணக்கில் இல்லாத ரூ.37,74,860 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்படும்.

அவர்கள் விளக்கமளிக்கும் போது அதில் திருப்தியடையாவிட்டால், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்பு துறை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
