தீபாவளி விடுமுறை... நாடு முழுவதும் அக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்​கள்

 
ரயில்

தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 12,000 சிறப்பு ரயில்​களை இயக்க உள்​ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் ரயில்

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், “இந்த 12,000 ரயில்களின் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும். இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1ம் தேதி முதல் 45 நாட்​களுக்​கும் மேலாக இயக்​கப்​படும்.

 எக்ஸ்பிரஸ் ரயில்

தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்​ப​திவு தேவை​யில்​லாத முற்றிலும் பொது பெட்​டிகளை கொண்ட 150 ரயில்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​படும். கடந்த 23ம் தேதி வரை 10,000 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்பட்​டுள்​ளன. தேவை​யின் அடிப்​படை​யில் கூடு​தல் ரயில்​கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்​டங்​களில் 29ல் 90 சதவீதத்​திற்கு மேல் நேரம் தவறாமை எட்​டப்​பட்​டுள்​ளது. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் தயார் நிலை​யில் உள்​ளது. இதன் மற்​றொரு ரயில் அக்டோபர் 15ம் தேதிக்​குள் வந்து விடும்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?