தீபாவளி தொடர் விடுமுறை... டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க உத்தரவு!

 
 டாஸ்மாக்

இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி திங்கட்கிழமை வரும் நிலையில், அதற்கு முன்பு வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதுபான கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தவிர பண்டிகைக்கால தேவையை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் (TASMAC) அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் கடைகளில் மதுபானங்களை கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

இது குறித்து வெளியான தகவலின்படி, தமிழகத்தில் 4,829 மதுபான கடைகள் உரிமையுடன் இயங்கி வருகின்றன. பண்டிகை நாட்களில் விற்பனை சற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அதிகப்படியாக விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளின் எண்ணிக்கையை அதிகரித்து கையிருப்பில் வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

மேலும், தீபாவளி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா இடங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் கையிருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?