களைகட்டும் தீபாவளி விற்பனை... ரூ.6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் கடைவீதிகளில் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இதற்கிடையே, சீனாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பட்டாசுகள் இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதில் மராட்டிய மாநில ஹவசேவா துறைமுகத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசாருடன் விரைந்து சென்ற அதிகாரிகள், துறைமுகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 மெட்ரிக் டன் சீன பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.6 கோடி 32 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
