வைரல் வீடியோ... தேமுதிக நிர்வாகிகள் மேடையில் குத்தாட்டம்!!

நடிகர் விஜயகாந்த் செப்டம்பர் 16, 2005ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்தார். 2006ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 2011ல் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் தேமுதிக வெற்றி பெற்று தமிழ்நாடு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
மேடையில் குத்தாட்டம் போட்ட தேமுதிக கட்சியினர்.....!#dmdk #mayiladuthurai pic.twitter.com/b0msfSx1Zu
— JAGANNATHAN (@Jaganathan_JPM) September 15, 2023
அதன் பின்னர் விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளால் அவரது செயல்பாடுகள் குறையத் தொடங்கின. இதனால் தேமுதிகவுக்கு தமிழக அரசியலில் பெரும் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் 71 வது பிறந்தநாள் விழா தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டாடப்பட்டது.அன்றைய தினம் தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
நேற்று விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிகவின் 19வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது.
தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் இறுதியில் விஜயகாந்த் படப் பாடலுக்கு தேமுதிக நிர்வாகிகள் மேடையில் குத்தாட்டம் போட்டு ஆடினர். இந்த ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!