காலையில் அதிர்ச்சி... மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டு வாசலில் ஆவின் தொழிற் சங்க நிர்வாகி தீக்குளிப்பு!
தமிழகத்தில் மதுரையில் திமுக எம்எல்ஏ., தளபதி வீட்டு வாசலில் இன்று காலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆவின் தொழிற்சங்க நிர்வாகி திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.மதுரை வடக்கு தொகுதியில் எம்எல்ஏ-வாக இருப்பவர் தளபதி. திமுக கட்சியைச் சேர்ந்த இவரது வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் எம்.எல்.ஏ., தளபதி நடைப் பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
காலை சுமார் 8 மணியளவில் மானகிரி பகுதியைச் சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க நிர்வாகி கணேசன் என்பவர் எம்எல்ஏ. தளபதியின் வீட்டுக்கு வந்துள்ளார். பின் திடீரென எம்.எல்.ஏ., வீட்டு வாசலில் நின்றபடியே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஓடிச் சென்று அவரைத் தடுத்து நிறுத்தி, தீயை அணைத்தனர். எனினும், அவரது கை, கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவரை மீட்டு, திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து விசாரித்து வரும் திருப்பரங்குன்றம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கட்சியின் பெயரைச் சொல்லி நிர்வாகிகள் சிலர் ரூ. 3 கோடி வரை நிதி வசூலித்து மோசடி செய்துள்ளனர். இது பற்றி பல முறை புகார் அளித்தும் முறையான விசாரணை நடவடிக்கை இல்லை என்பதால், நானும் கலைஞருடன் சேரப்போகிறேன் எனக்கூறி அவர் தீக்குளித்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருப்பரங்குன்றம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!