முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்.23ல் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
சென்னையில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் வரும் செப்டம்பர் 23ம் தேதி திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுமென கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 23.09.2025 செவ்வாய் கிழமை, காலை 10 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.

இதில் தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
