”விஜயகாந்த் செய்த துரோகம்”.. கலைஞர் மரணத்திற்கு காரணம்.. ஆர்.எஸ். பாரதி பரபரப்பு பேச்சு..!

 
 ஆர்.எஸ். பாரதி

தமிழகத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, நெல்லையில் உள்ள மக்களுக்கு அல்வா வழங்கும் போராட்டத்தை திமுக நடத்தியது. இதில் பேசிய  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விஜயகாந்த் செய்த துரோகம் தான் கலைஞரின் உயிரை பறித்தது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர், "கலைஞர் இறந்தபோது அண்ணா அருகில் இடம் கொடுத்து அடக்கம் செய்ய மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்ட கல் நெஞ்சம்.ஆனால் யாரும் கேட்காமல் விஜயகாந்துக்கு அரசு மரியாதை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை அழைத்தார் கலைஞர். அந்த அழைப்பை ஏற்காமல் விஜயகாந்த் தனியாக தேர்தலில் போட்டியிட்டார். எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வர் ஆகியிருப்பார். முதல்வர் ஆன அந்த தைரியத்தில்  கலைஞர் உயிரோடு இருந்திருப்பார்.

விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால்.. எல்லாமே மாறி இருக்கும்- ஆர். எஸ்.பாரதி | DMK organizational secretary RS Bharati speech on vijayakant

கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று அவரும் உயிருடன் இருந்திருப்பார். இதற்கெல்லாம் காரணம் விஜயகாந்தின் துரோகம். இந்த துரோகத்தால் தான் கலைஞர் இறந்தார். அவர் இறக்கும் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் சாகக் காரணம் விஜயகாந்த் தான்,'' என்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web