திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவி கைது!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிச்சிறுவனுடன் பழகிய 16 வயது சிறுமி கர்ப்பமானாள். அவரை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய முயன்ற வழக்கில் திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியிடம், 17 வயது சிறுவன் நெருங்கி பழகி வந்த நிலையில், தவறான உறவு காரணமாக சிறுமி கர்ப்பமாகி விட்டார்.
சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் உறவினரான திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவி அமுதா உதவியுடன் சிறுவனின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றனர்.ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சிறுமிக்கு கருகலைப்பு செய்ய மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
சிறுமியின் பெற்றோர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிறுவனின் பெற்றோர் கெளரி, விஜயன் மற்றும் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவி அமுதாள் மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் உடந்தையாக இருந்த பள்ளி அலுவலக உதவியாளர் தலைமறைவாகிவிட்டார். இவரையும் சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!