இன்று பிரம்மாண்ட மேடையில் திமுக இளைஞர் அணி மாநாடு .... சேலத்தில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்... !

 
திமுக

திமுக இளைஞரணி மாநாடு இன்று ஜனவரி 21ம் தேதி காலை 10 மணிக்கு சேலத்தில்  கொடியேற்றத்துடன்   பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.  முதல்வர்,  அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என லட்சக்கணக்கானோர் நேற்று மாலையே மாநாட்டு திடலில் திரண்டு விட்டனர். இதனையொட்டி 1500 டிரோன்களின் வர்ணஜாலம், பைக் பேரணியுடன் மாநாடு களைகட்டத் தொடங்கியுள்ளது. திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு  2007ல் திருநெல்வேலியில் கோலாகலமாக நடத்தப்பட்டது.   இன்று நடைபெற உள்ள 2 வது திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலம்  பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரம்மாண்டமாக மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.  

சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கெனவே இரு முறை பல்வேறு காரணங்களால் மாநாடு நடைப்பெறும் தேதி தள்ளி வைக்கப்பட்ட  நிலையில்,  ஜனவரி 21ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளதையடுத்து சேலம் மாவட்டத்தில் திமுக தொண்டர்கள் சுழன்றடித்து மாநாடு பணிகளை செய்து வருகின்றனர். 

திமுக இளைஞரணி

முன்னதாக சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி திட்டமிட்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கி வந்தார். பின்னர், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

இதனைத் தொடர்ந்து மீட்பு பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் பெய்த கனமழை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை புரட்டிப்போட்டது. அங்கு அமைச்சர்கள், திமுகவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் 2-வது முறையாக மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, உதயநிதிக்கு கட்சியிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, ஆட்சியிலும் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட பிறகு நடைப்பெற இருப்பதால், உதயநிதியின் பலத்தை கட்சியில் காட்டும் விதத்தில் குறைந்தது 5  லட்சம் பேராவது  மாநாட்டிற்கு திரள வேண்டும் என்று திமுகவினர் வேலைப் பார்த்து வருகின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், திமுகவினர் பலத்தையும், உதயநிதியின் ஆளுமையையும் வெளிப்படுத்தும் விதமாக  மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரப்படுகின்றன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!