வேட்டிக்கு கட்டியிருந்தா அனுமதி கிடையாது... விராட் கோஹ்லி ஹோட்டலில் அதிர்ச்சி!

 
விராட் கோஹ்லி

மும்பையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு சொந்தமான  8 கம்யூன் என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு  வருகிறது.  8500 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு தினமும்   நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில்  மதுரையில் வசித்து வருபவர்  தமிழ் ராப் பாடகர் ராம்.


 

இவர் சமூகவலைத்தள பக்கத்தில்  ராவண ராம் என்ற பெயரில் வேட்டி சட்டை அணிந்து ராப் பாடல் பாடி வருகிறார்.  இவர்  மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  வேட்டி அணிந்து விராட் கோலி உணவகத்திற்கு சாப்பிட சென்றார். இந்நிலையில்  உடையை காரணம் காட்டி உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.  இது குறித்து வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  

விராட் கோஹ்லி

 அந்த வீடியோவில் உடையை காரணம் காட்டி தன்னை உள்ளே அனுமதிக்கவில்லை. விராட் கோலியின் பெயருக்காக தான் இங்கே பலரும் வருகிறார்கள். நான் தங்கியிருந்த ஹோட்டலில் கூட சாப்பிடாமல் தான்  இங்கு சாப்பிட வந்தேன்.  இது போன்று நடக்காமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதீத பசியில் இங்கு சாப்பிட வந்தபோது உள்ளே அனுமதிக்காமல் இருந்தது மிகவும் வருத்தமாக உள்ளது  என குறிப்பிட்டுள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web