மருந்துச் சீட்டுகள் புரியற மாதிரி கேபிட்டல் எழுத்தில் தான் எழுதணும் ... மருத்துவர்களுக்கு அதிரடி உத்தரவு!

 
மருந்து சீட்டு

உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவரிடம் போனால் அவர் எழுதும் மருந்து சீட்டை பெரும்பாலான நேரங்களில் யாருக்கும் புரியாது. யாராலும் படிக்க முடியாது. மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் நபர் எப்படியோ எழுத்து கூட்டி படித்து மருந்தை தேடிப்பிடித்து எடுத்துக் கொடுப்பார். நோயாளிகளோ உடன் சென்றவர்களோ படித்து புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு தான் மருத்துவரின் கையெழுத்துக்கள் இருப்பது வழக்கம். இந்நிலையை மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மருந்து சீட்டு

 

அதன்படி  இனி நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதித் தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித் தர வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ரூல்ஸ் இருக்கிறது. ஆனால், அதை  மருத்துவர்கள்  கண்டுகொள்வதும் இல்லை. கடைப்பிடிப்பதும் இல்லை.  இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மருந்து சீட்டு


 நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளில் மருந்துகளை எழுதித் தரும் போது ஆங்கிலத்தில் CAPTAL எழுத்துகளில்  மட்டும் தான் எழுதித் தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.  நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகளின்  பெயர்கள்  எழுதித் தரப்பட வேண்டும் என மத்திய அரசு  ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில்,  தமிழ்நாடு அரசும்  தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தான் எழுத வேண்டும் என மருத்துவத்துறை அதிரடி  உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web