நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை!

 
விஜயகாந்த்

நுரையீரல் சுவாசப் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்துக்கு அடுத்தக்கட்ட சிகிச்சை மேற்கொள்வது குறித்து அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்புவார் என்றும், தான் உடனிருந்து கவனித்து வருவதாகவும் பிரேமலதா தெரிவித்திருப்பது தொண்டர்களுக்கு ஆறுதலளித்துள்ளது.

நேற்று ஒரே நாளில், விஜயகாந்த் உடல்நிலைக் குறித்து மியாட் மருத்துவமனை இரு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில், திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும், இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது தொண்டர்களை பதற்றமடைய செய்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நவம்பர் 18ம் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘’விஜயகாந்த் அவர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’’ என்று மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயகாந்த் சிகிச்சைக்காக என்ன உதவி வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் கேட்குமாறு தமிழக அரசு, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web