பெரும் சோகம்... நாயை விரட்ட முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மத்தியப் பிரதேசம் மாநிலம் கஜுராஹோவில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில், நாயை விரட்ட முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தர்பூர் மாவட்டம் ரயில் நிலையம் அருகிலுள்ள ஒரு விடுதிக்குள் நாய் ஒன்று நுழைந்ததால், அதை வெளியேற்ற அந்த இளைஞர் நீளமான இரும்புக் கம்பி ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். இதுவே அவருக்கு விதியின் விளையாட்டாக மாறியுள்ளது.
#WATCH | Youth Di*s After Getting Electrocuted While Trying To Chase Dog Away With An Iron Rod At A Resort Near Khajuraho Railway Station In #Chhatarpur#MadhyaPradesh #MPNews #IndiaNews pic.twitter.com/AIlfXS7wsk
— Free Press Madhya Pradesh (@FreePressMP) April 15, 2026
விடுதியின் சுற்றுச்சுவர் அருகே சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பி எதிர்பாராதவிதமாக மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் பட்டது. கம்பி பட்ட அடுத்த விநாடியே பெரும் தீப்பொறி கிளம்பி, மின்சாரம் பாய்ந்ததில் அந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து முழுவதும் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், இளைஞர் சடலமாகத் தேங்கியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதியை ஒட்டிச் செல்லும் மின்கம்பிகள் விதிகளுக்கு மாறாகத் தாழ்வாகச் சென்றதா அல்லது கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
