ரூ30 லட்சம் தமிழ் பல்கலைகழகத்துக்கு நன்கொடை அளித்த அமெரிக்க தம்பதி... குவியும் பாராட்டுக்கள்!

 
விஜயலட்சுமி

அமெரிக்காவின் ரோடு ஐலண்டில் வசித்து வரும் தம்பதி  டாக்டர் திருஞானசம்பந்தம்-விஜயலட்சுமி .  தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்த தம்பதிகள்  விஜயலட்சுமி திருஞானசம்பந்தம் தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை நிறுவி இதன் மூலம் பல சேவைகளை செய்து வருகின்றனர். இதன் மூலம் உலகம் முழுவதும்  தமிழ்க் கல்வி, தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சமயநெறி தழைக்க தங்கள் குடும்ப வருவாயின் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம்

அதன்படி  தமிழகம் வருகை தந்திருக்கும் இந்த தம்பதி நேற்று  “ தஞ்சை  தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.30 லட்சம் காசோலையை நன்கொடையாக  வழங்கினர். காசோலையை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் பெற்றுக்கொண்டார்” எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தம்பதிகளின் இந்த சேவைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் அமைந்துள்ள  பல்வேறு பல்கலைக்கழகங்களில், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் 'தமிழ்ப் பல்கலைக்கழகம்' தனிச்சிறப்பு வாய்ந்தது.  972.7 ஏக்கர்  நிலப்பரப்பில் தஞ்சாவூர் திருச்சி சாலையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம், தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டிற்கான  உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.1981   செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், கலைப்புலம், அறிவியல்புலம், மொழிப் புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்புலம் ஆகிய5 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம்

இந்த ஐந்து பிரிவுகளுக்கும் தனித்தனியாக 5  கட்டிடங்கள் . அந்த 5  கட்டிடங்களும் 'தமிழ்நாடு' என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது 'த, மி, ழ், நா, டு' என ஒவ்வொரு எழுத்துக்களின் வடிவமைப்பில் ஒவ்வொரு கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. 'த' வடிவ கட்டிடத்தில் கலைப்புலம் துறைகளும்,'மி' வடிவ கட்டிடத்தில் அறிவியல்புலம் துறைகளும், 'ழ்' வடிவ கட்டிடத்தில் மொழிப்புலம் துறைகளும், 'நா' வடிவ கட்டிடத்தில் சுவடிப்புலம் துறைகளும், 'டு' வடிவகட்டிடத்தில் வளர்தமிர்புலம் துறைகளும் செயல்பட்டு வருவதே இதன் சிறப்பு.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web