ஊருக்குள்ள வராதீங்க.. மாற்றுத்திறனாளி தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம்!!

 
சாவித்திரி

எத்தனை தான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் சாதி, இன வேறுபாடுகளும், மூடப்பழக்க வழக்கங்களும் மட்டும் இன்னும் பல பகுதிகளில் மாறவே இல்லை. இதனால் மற்றவர்களின் மனம் புண்படும் . அவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறோம் என எண்ணிப்பார்ப்பதே கிடையாது. கர்நாடகா மாநிலம், தேவரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்   சாவித்திரி. இவர்  பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளி பெங்களூருவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர்   ஆந்திராவை சேர்ந்த மணிகண்டன் என்ற பேச்சுத்திறன் மாற்றுத்திறனாளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

5வது திருமணம்

இருவரும்  வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.   இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில், 2021ல்   பெங்களூருவில்   திருமணம் செய்து கொண்டனர். சிறிது காலம் கழித்து   சாவித்திரியின் பெற்றோர் இருவரையும் ஏற்றுக் கொண்டனர்.அவர்கள் பெண்ணையும், மருமகனையும்   தங்கள் கிராமத்திற்கு அழைத்து சென்ற போது   கிராம மக்கள் மாற்றுத் திறனாளி தம்பதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை  கிராமத்திற்குள் அனுமதிக்க முடியாது என விளக்கம்  கூறினர்.உடனடியாக அவர்கள் இருவரும் கிராமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் ரூ30000  அபராதம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

சாவித்திரி

இதனையடுத்து  இருவரும்  தாலுகா அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தங்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  புகார் அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவை வாங்கிக் கொண்ட தாசில்தார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.  இந்நிலையில் 2 பேரும் சித்ரதுர்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டனர்.   மாற்றுத் திறனாளி தம்பதியை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web