நாய் கடித்தால் உடனே இதைச் செய்ய மறக்காதீங்க... தடுப்பூசி அலட்சியத்தால் நாய் கடித்து விவசாயி உயிரிழப்பு!

 
தெருநாய் நாய் ரேபிஸ்

கிருஷ்ணகிரி அருகே தெருநாய் கடித்த விவசாயி ஒருவர் முறையான தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்திய காரணத்தால், ரேபிஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் (45) என்ற விவசாயி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளார். நாய் கடித்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக் கொண்ட அவர், அதன் பிறகு எடுக்க வேண்டிய தொடர் தடுப்பூசிகளைத் தவிர்த்துள்ளார். சுமார் 3 மாதங்கள் கழித்து அவருக்குக் கைகளில் வலி மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 27-ம் தேதி கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஏகாம்பரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெருநாய்

நாய் கடித்தால் செய்ய வேண்டிய முக்கிய நடைமுறைகள்

இந்தச் சம்பவம், நாய் கடித்தால் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பின்பற்ற வேண்டியவை குறித்து அவசியம் தெரிஞ்சுக்கோங்க. இதை அலட்சியப்படுத்தாமல் ஃபாலோ பண்ணுங்க.

நாய் கடித்த இடத்தை உடனடியாக ஓடும் குழாய் நீரில் சோப்பு போட்டு 15 நிமிடங்கள் நன்கு கழுவ வேண்டும். இது வைரஸின் வீரியத்தைக் குறைக்க உதவும். நாய் கடித்த முதல் நாள், 3, 7 மற்றும் 28வது நாள் என மருத்துவர் பரிந்துரைக்கும் அனைத்துத் தவணைத் தடுப்பூசிகளையும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு தடுப்பூசியைத் தவற விடுவது கூட உயிருக்கு ஆபத்தாக முடியும். கடித்த இடத்தில் காரம், சுண்ணாம்பு அல்லது இலை தழைகளைப் போட்டுச் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

குடிநீர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றுக்குக் கருத்தடை செய்யவும், வெறிநாய் எதிர்ப்பு ஊசிகளைப் போடவும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரேபிஸ் ஒருமுறை பாதித்து அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டால், அதிலிருந்து மீள்வது மருத்துவ ரீதியாக மிகவும் கடினம். எனவே, 'வருமுன் காப்பதே' சிறந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!