மறந்துடாதீங்க... இன்று கடைசி தேதி... ரயில்வேயில் 5,696 காலி பணியிடங்கள்!

 
இந்தியன் ரயில்வே

மறந்துடாதீங்க... உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைப்பதற்கு இன்றே கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே அதிகாரப்பூர்வ இணையதளத்தை மேலதிக விபரங்களுக்கு பார்வையிடுங்க. இந்திய ரயில்வே துறையில் 5,696 அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களுக்கு திறமையும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்

இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட்டாக 5,696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த அறிவிப்பில், அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 5,696. இதற்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ படித்திருக்க வேண்டும். 

இந்தியன் ரயில்வே

இதற்கான வயதுத் தகுதி 01.07.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாதச் சம்பளம் ரூ. 19,900 வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 ஆகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web