மலையாள சினிமாவை சிதைச்சுடாதீங்க... 21 சங்கங்கள் இருக்கு... பிரச்சனைக்கு நான் மட்டுமே தான் காரணமா? - மோகன்லால்
“மலையாள திரையுலகில் மொத்தம் 21 சங்கங்கள் இருக்கு. ஏதோ அம்மா சங்கம் மட்டுமே இருப்பதைப் போல பேசுறீங்க. நான் எங்கேயும் ஓடி ஒளிந்துக் கொள்ளவில்லை” என்று ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு முதல் முறையாக மெளனம் கலைத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் மோகன்லால்.
இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், “மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும் போது எப்படி அம்மா சங்கத்தை மட்டும் குறை சொல்ல முடியும்? ‘அம்மா’ மட்டுமே எப்படி எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இங்கே தான் இருக்கிறேன். ஹேமா கமிட்டியின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ’அம்மா’ மீது அவதூறு பரப்ப வேண்டாம். இந்த புகாரால் மலையாள சினிமா பாதிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறேன். இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், காவல்துறையும் தங்கள் கடமையைச் செய்கின்றன. விரைவில் உண்மை வெளியே வரும். வயநாடு போன்ற பேரிடர் சமயத்தில் ’அம்மா’ பல உதவிகளைச் செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஹேமா கமிட்டியில் இருந்து என்னையும் விசாரித்தார்கள். ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நானும் ஹேமா கமிட்டியினரிடம் என்னுடைய பதிலைக் கூறி இருந்தேன். ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள சினிமாவையே தகர்த்து எறியும் வகையில் உள்ளது. மலையாள சினிமா சிதைந்து போவதை நினைத்து கவலைப்படுகிறேன். பாலியல் புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் கருத்து சொல்ல இயலாது. பொறுமையாக இருங்கள். அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். நடந்த பிரச்சனைகளுக்கு நான் மட்டுமே காரணமா? மலையாள சினிமாவை சிதைத்துவிட வேண்டாம். மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்தே ராஜினாமா செய்வது பற்றி முடிவெடுத்தோம். பாலியல் புகார்கள் மீது கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு, தேர்தல் நடத்தப்படும். அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என்று பேசினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!