இனி இவங்களுக்கு டபுள் பென்சன்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
பென்சன்

கையும், காலும் உழைக்கும் வரை யாரையும் நம்பத் தேவையில்லை. நாம் சம்பாதித்து நாமே நம்மை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாம் ஓய்ந்து ஓய்வு தேடுகிற காலத்தில் பணம் கையில் இருந்தால் தான் யாராவது ஒருவர் நம்மை பார்ப்பர். அதற்காக முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டியது அவசியம்  குறிப்பாக பென்சன் தொகை வந்தால் கடைசி காலத்தில் எந்த சிரமமும் இல்லாமல் வாழலாம்.

பென்சன்


 மத்திய மாநில அரசுகள் கணவனை இழந்த பெண்களுக்கு  வாழ்க்கையில் நிதி ஆதரவு கிடைக்க அரசு தரப்பிலிருந்து விதவை பென்சன் திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது.  இதில் வழங்கப்படும் பென்சன் தொகை மாநிலத்துக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.  அந்த வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது விதவை பெண்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை உயர்த்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணம்

இந்த   அறிவிப்பை அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா வெளியிட்டுள்ளார். கௌகாத்தியில் நடைபெற்ற 100வது சட்டசபை கூட்டத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.  
விதவை பென்சன் திட்டத்தில் தற்போது விதவைப் பெண்களுக்கு ரூ300 பென்சன் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ950 ஆக  உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web