2 மாதத்தில் தொப்பையை குறைக்க இந்த ஜூஸை குடிச்சி பாருங்க!!

 
கொழுப்பு

கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடும் பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் கண்ணில் பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டியது பின்னர் மணிக்கணக்கில் ஜிம்களில் ஒர்க் அவுட் கொடுக்க வேண்டியது.  இன்றைய இளைஞர்களின் நவீன வாழ்க்கை முறை இது தான். மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால்  இவை பல நேரங்களில் ஆபத்துக்களை விளைவிக்க கூடும்.

இவைகள் அனைத்துமே இதய ஆரோக்கியத்தை பதம் பார்த்துவிடும்.  உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுவது அவசியமானது. அவை நல்ல கொழுப்பு என அழைக்கப்படுகின்றன.   உடலில் படியும் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள்   சில நேரங்களில்  உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பு மற்றும் இதய நோயையும் ஏற்படுத்தும் அபாயம் நிறைந்தவை.    ஹைகொலஸ்ட்ரால் லெவலால் பாதிக்கப்பட்டால்  சுரைக்காய்  வெஜிடபிள் ஜூஸை தொடர்ந்து 3 - 4 மாதங்கள் குடித்து வந்தாலே போதும். கெட்ட கொலஸ்ட்ரால் லெவலை கணிசமாக குறைக்கலாம். 

ஜூஸ்


டயட்ரி ஃபைபரின் சிறந்த மூலமாக சுரைக்காய் இருக்கிறது. இது கொலஸ்ட்ரால் லெவலை குறைக்க உதவுகிறது. சுரைக்காயில் இருக்கும் டயட்டரி ஃபைபர் செரிமான மண்டலத்தில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகளுடன் bind ஆகிறது மற்றும் உடலில் இருந்து அவற்றை அகற்ற உதவுகிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த கெட்ட கொலஸ்ட்ரால் absorption குறைகிறது.
 சுரைக்காயில் இயற்கையாகவே நிறைவுற்ற கொழுப்பு  மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த ஒரு காயாக சுரைக்காய் இருக்கிறது.  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க விரும்பினால் சுரைக்காயை டயட்டில் சேர்த்து கொள்வதோடு, இந்த காயின் ஜூஸை பருகலாம்.


 சுரைக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ   ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட அழற்சி   இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கிறது. சுரைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் இதை எதிர்த்து போராட உதவுகின்றன. சுரைக்காய் பெரும்பாலும் தண்ணீரால் நிரம்பி இருக்கிறது. நீர்சத்து நிறைந்த காயாக இது இருக்கிறது.

சுரைக்காய்

இதை ஆரோக்கியத்திற்கு நம் உடல் எப்போதும் ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியம். ஏனென்றால் சரியான அளவில் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது ரத்த அளவை பராமரிக்க உதவுகிறது, தவிர இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது. தவிர ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை சிறப்பாக வைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பொட்டாசியம் சுரைக்காயில் அதிகம் உள்ளது

. உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது. பொதுவாக பொட்டாசியம் நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தில் சோடியத்தின் விளைவுகளை எதிர்க்க உதவுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் நிறைந்த சுரைக்காய் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. அதே நேரத்தில்  ஹை கொலஸ்ட்ரால் மற்றும் பிற இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து அதன் பிறகு இதனை எடுத்துக் கொள்வது சிறந்தது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web