அரசு பேருந்தில் ஓட்டுனர், கண்டக்டர் மோதல்... பரபரப்பு... !
மாநகர அரசு பேருந்து ஒன்று சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. மாநகர பேருந்து தடம் எண் 70 கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேருந்தை ஓட்டுனர் சிவானந்தம் ஓட்டினார். பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் இறங்கியதும், முன்னால் நின்ற மற்றொரு மாநகர பேருந்தை எடுத்து வழிவிடுமாறு ஓட்டுனர் சிவானந்தம் கூறியுள்ளார். அந்த மாநகர பேருந்தின் ஓட்டுனர் புண்ணியமூர்த்தி, பேருந்தை எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சிவானந்தம், எதுவாக இருந்தாலும் பேருந்துக்குள் வந்து பேசும்படி கூறினார்.
ஆத்திரமடைந்த புண்ணியமூர்த்தி, அந்தப் பேருந்தின் கண்டக்டர் பாலகுமார் இருவரும் பேருந்துக்குள் ஏறியவுடன் சிவானந்தம் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பேருந்தை எடுத்தார். அதிர்ச்சி அடைந்த புண்ணியமூர்த்தி, பாலகுமார் இருவரும் பேருந்தை நிறுத்தும்படி கூறினர். ஆனால் சிவானந்தம் கேட்காமல் தொடர்ந்து பேருந்தை இயக்கினார். இதனால் ஓட்டுனர்கள் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. மேலும் புண்ணியமூர்த்தி பேருந்தில் இருந்த கியர் ராடை பிடித்து இழுத்து பேருந்தை நிறுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுனர் புண்ணியமூர்த்தி மற்றும் கண்டக்டர் பாலகுமார் இருவரும் சேர்ந்து சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். கண்டக்டர் பாலகுமார் பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி சிவானந்தத்தை காலால் எட்டி உதைத்தார்.
பேருந்திற்குள் பயணிகள் கண் முன்பே மாநகர பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தின் தானியங்கி கதவை திறந்து டிரைவர் புண்ணியமூர்த்தி, கண்டக்டர் பாலகுமார் இருவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர். இதனை மற்றொரு பேருந்தின் ஓட்டுனர் , கண்டக்டர் இருவரும் சேர்ந்து தாக்குவதை அந்த பேருந்தின் கண்டக்டர் தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க